
இந்தியாவில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது . அதேபோல் ஒமிக்ரான் வகை கரோனா பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே செல்கிறது. இந்தநிலையில் இத்தாலியில் இருந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்த தனி விமானத்தில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
விமானத்தில் வந்த 179 பேரில், 125 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அமிர்தசரஸ் விமான நிலைய இயக்குனர் வி.கே.சேத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கரோனா உறுதியான 125 பேரின் மாதிரிகளும் மரபணு வரிசைமுறை சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவிலேயே, பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.