123 cobras found at a house in madhyapradesh

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் ஒரு சிறிய வீட்டிற்குள் இருந்து கடந்த ஒரு வாரத்தில் 123 விஷப்பாம்புகள் பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்த வருகிறார் ஜீவன் சிங் குஷ்வா. இவரது வீட்டில் கடந்த வாரம் சில நாகப்பாம்பு குட்டிகள் தென்பட்டுள்ளன. இதனைக்கண்ட அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அங்கிருந்து அந்தப் பாம்புகளை வெளியேற்றியுள்ளார். ஆனால், அடுத்தடுத்த நாட்களிலும் வீட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சாரை சாரையாகப் பாம்புகள் படையெடுத்துள்ளன.

Advertisment

இதனால் செய்வதறியாது திகைத்த ஜீவன் சிங், தனது குடும்பத்தில் உள்ள நபர்களை வேறு ஊரில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார். பாம்புகள் படையெடுப்பு குறையாத நிலையில், கடந்த ஒருவாரத்தில் சுமார் 123 விஷப்பாம்புகள் அவரது வீட்டிற்கு வந்துள்ளன. இவை அனைத்தும் குட்டிகளாக இருப்பதனால், ஜீவன் சிங்கின் வீட்டின் எதாவது ஒரு பகுதியில் பாம்பு முட்டையிட்டுச் சென்றிருக்கலாம் அதன் காரணமாகவே அடுத்தடுத்து இவ்வளவு பாம்புக் குட்டிகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பாம்புகளின் இந்தத் தொடர் படையெடுப்பைக் கெட்ட சகுனமாகக் கருதும் அக்கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனையடுத்து அங்கு பாம்பு பிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.