Advertisment

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தர்ணா போராட்டம்!

opposition parties

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கிய நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டது மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உள்நோக்கத்தோடு தாக்கியதன்மூலமாகஅவையின் மாண்பைக் குலைத்தது ஆகியவற்றுக்காகக் காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள்,12 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிநீக்கத்தைத் திரும்பப் பெறவேண்டும்குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவைசபாநாயகருமான வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்தகோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். இந்தநிலையில்12 உறுப்பினர்களின்இடைநீக்கத்தைத்திரும்பப் பெறக்கோரி நேற்று நாடாளுமன்றத்தின்காந்தி சிலை முன்னர் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர்மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,12 மாநிலங்களவை உறுப்பினர்களின்பதவி நீக்கத்தைத்திரும்பப் பெறவேண்டும் என வெங்கையா நாயுடுவுக்குக்கடிதம் எழுதினார்.

Advertisment

இந்தநிலையில்இன்று காலை,ராகுல் காந்தி உள்படஎதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு,12 மாநிலங்களவை உறுப்பினர்களின்பதவி நீக்கத்தைத்திரும்பப் பெறக்கோரி போராட்டம் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது பதவிநீக்கம் செய்யப்பட்ட 12 மாநிலங்களவை உறுப்பினர்களும்நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Parliament winter session RajyaSabha Opposition parties
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe