Skip to main content

13 லாரி டிரைவர்கள்-கிளீனர்கள் கொன்று புதைப்பு; 12 பேருக்கு தூக்கு!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

andhra highway

 

ஆந்திரா மாநில நெடுஞ்சாலைகளில், 2008- 2009 ஆண்டுகளில் பல்வேறு லாரிகள், அதன் ஓட்டுனர்கள் மற்றும் கிளினர்களோடு காணாமல் போயின. அதேபோல் தமிழ்நாட்டை  சேர்ந்த ஒரு லாரியும் ஓட்டுநர் மற்றும் கிளினரோடு காணாமல் போனது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அதேபோன்ற மேலும் 4 சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

 

இந்த வழக்குகளில் நடத்தப்பட்ட விசாரணையின்போது முன்னா என்ற அப்துல் சம்மத் தலைமையில் அவரது கூட்டாளிகள், காவல்துறை உடையணிந்து லாரிகளை மறைப்பதும், பிறகு ஆவணங்களை சரிபார்ப்பது போல் லாரி ஓட்டுநர்களையம், கிளினர்களையும் கொன்றுவிட்டு பின்னர் லாரிகளை உடைத்து அதன் பாகங்களையும் உதிரிகளையும் விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அம்மாநில காவல்துறை முன்னா மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்தது.

 

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், முன்னா மற்றும் அவரது கூட்டாளிகள் 13 லாரி ஓட்டுனர்கள் மற்றும் கிளினர்களை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஆந்திர மாநில நீதிமன்றம் முன்னா மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேருக்கு மரணதண்டனை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.