Advertisment

நடிகர் நடிகைகளை குறி வைக்கும் பாஜக... கட்சியில்  இணைந்த 12 பிரபலங்கள்...

நாடாளுமன்ற தேர்தல் எப்போது என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்தே மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் பாஜகவில் இணைய தொடங்கிவிட்டனர். இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள அரசியல்வாதிகளும் அடங்குவார்கள்.

Advertisment

12 celebrities

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பாஜக மிகப்பெரிய உச்சத்தை மேற்கு வங்கத்தில் பெற்று வருகிறது. அதற்கான பதில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள்தான். 2014 தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்ற பாஜக, இந்தமுறை நடைபெற்ற தேர்தலில் 19 இடங்களை பிடித்திருக்கிறது. பாஜக மேற்கு வங்கத்தில் மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது.

இந்நிலையில், வங்காள மொழி நடிகர் நடிகையர் 12 பேர் நேற்று பாஜகவில் இணைந்தனர். இதில் ரிஷி கவுசிக், காஞ்சனா மொய்த்ரா, ருபஞ்சனா மித்ரா, பிஸ்வஜித் கங்குலி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேற்கு வங்க பாஜக கட்சியின் தலைவரான திலிப் கோஷ் தலைமையில் நேற்று டெல்லியில் இந்த பிரபலங்கள் இணைந்தனர். அவர்களை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

west bengal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe