Advertisment

இரண்டு மாநிலங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரத்து: இன்று மாலை முடிவெடுக்கிறது கோவா!

Advertisment

12 th exam

கரோனாஇரண்டாவது அலை காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தமுடியாதசூழல் நிலவிவந்த நிலையில், நேற்று (01.06.2021) 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து பிரதமர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரத்துசெய்யப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் மாநில பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு இரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்தது. தமிழ்நாடு அரசு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து பெற்றோரின் ஆலோசனையைக் கேட்க முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில், குஜராத் அரசு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வைஇரத்து செய்துள்ளது. ஏற்கெனவே ஹரியானா அரசும்12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கோவா அரசு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வைநடத்துவது குறித்து இன்று (02.06.2021) மாலை முடிவுசெய்யப்படும் என அறிவித்துள்ளது.

+2 exams Goa Gujarat haryana Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe