மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மழைக்கால பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தொடர்பாககேள்வியெழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் அவர்களை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சபாநாயகரை அவமதிக்கும் விதத்தில் நடந்துகொண்டதாக அமளியில் ஈடுபட்ட 12 பாஜக எம்எல்ஏக்களை ஓராண்டிற்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் உத்தரவிட்டார். இந்நிலையில், அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 உறுப்பினர்களும் மகாராஷ்ட்ரா ஆளுநர் பகத்சிங் கோசியாரியிடம் தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்ட்ராவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் முறையீடு!
Advertisment