Advertisment

11 பேர் தற்கொலை... டைரியில் ஷாக் தகவல்கள்!!!

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11பேர் தூக்கிட்டு தற்கொலை செய்தவர்களின் வீட்டில் கிடைக்கப்பட்ட டைரியில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியின் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர்கள் பவனேஷ் மற்றும் அவரது சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் நேற்றுமுன்தினம்வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தனர்.

Advertisment

mass suicide

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

தற்கொலை செய்துகொண்டதில் வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(வயது77) தரையில்படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கி இருந்தனர். இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ்(வயது50), லலித் பாட்டியா(45), மகள் பிரதிபா(வயது57). பவனேஷ் மனைவி சவிதா(வயது48), சவிதாவின் மகள் மீனு(வயது23), நிதி(25), துருவ்(15). லலித் பாட்டியாவின் மனைவி டினா(42). இவரின் 15வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33).

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

தற்கொலை செய்து கொண்ட லலித், பவனேஷ் குடும்பத்தினர் மர்மமான வழிபாட்டு முறையைப் பின்பற்றி, அதற்காக வீட்டினுள் சிறிய கோவில் ஒன்றையும் கட்டி வழிபட்டுள்ளனர். இவர்கள் வழிபாடு மிகவும் புதிராகவும், அதேசமயம் மூடநம்பிக்கை மிகுந்ததாகவும் இருக்கிறது. ஆனால் இவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்கு படித்தவர்கள் என்பதால், மூடநம்பிக்கை உள்ளவர்கள் என்பதை நம்ப உறவினர்களும், நண்பர்களும் மறுக்கின்றார்கள். ஆனால் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியின்மூலம் இவர்கள் மூடநம்பிக்கை மிக்கவர்கள் என்று தெளிவாகிறது.

ambulance

இவர்கள் தற்கொலை செய்யும் நோக்கில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து தயாராகியுள்ளனர். இந்த முறையில் தற்கொலை செய்துகொண்டால்தான் சொர்க்கத்தை அடைய முடியும் என்ற நோக்கில் தற்கொலை செய்துள்ளனர்.காவலர்களின் முதல்கட்ட விசாரணையில் நாராயண் தேவியை முதலில் அவரின் இரு மகன்களும் கொலை செய்துவிட்டு, மனைவிகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்திருக்கின்றனர். அதன்பின் குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு, இறுதியாக தாங்களும் தூக்குமாட்டி இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. தற்கொலை செய்வதற்கு முன் அன்று இரவு வீட்டில் உணவு சமைக்காமல் கடையில் இருந்து உணவு வாங்கிவந்து சாப்பிட்டுள்ளனர். வீட்டில் வளர்த்து வந்த நாயை மொட்டைமாடியில் கட்டிவிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் சொர்கத்தை அடையும் வழி என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எழுதப்பட்டுள்ளது. அதில் தற்கொலை செய்வது வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைதான் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தற்கொலை செய்யும் போது, விளக்குகள் அனைத்தும் குறைந்த வெளிச்சத்தில் இருக்க வேண்டும். நள்ளிரவு 12 மணியில் இருந்து ஒரு மணிக்குள்தான் தற்கொலை செய்ய வேண்டும். தற்கொலை செய்யும்போது, அனைவரின் கண்களும் கட்டப்பட்டிருக்க வேண்டும். தற்கொலைக்குப் புடவை அல்லது கயிறு பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் பாட்டியை தரையில் கீழே படுக்கவைத்து தற்கொலை செய்யவைக்கலாம் என்று எழுதப்பட்டுள்ளது.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

கடந்த மாதம் 26 ஆம் தேதி இந்தக் குறிப்புகள் அனைத்தும் எழுதப்பட்டுள்ளது. மேலும் அதில் ஜூன் 30-ம் தேதி இரவு அனைவரும் கடவுளைச் சந்திக்கச் செல்கிறோம். அதுமட்டுமல்லாமல் “நாங்கள்11 பேரும் இறந்தபின் எங்களுடைய கண்களைத் தானமாக வழங்கிவிடுங்கள். 22 பேருக்கு பார்வை கிடைக்க நாங்கள் உதவியாக இருப்போம். இது எங்களுடைய விருப்பம்” என தெரிவித்துள்ளனர். என்றுகாவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe