Advertisment

இரண்டு சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்; 11 பேர் அதிரடி கைது

11 people misbehaviour two girls in jharkhand

Advertisment

பிறந்தநாள் விழாவுக்கு சென்று வீடு திரும்பிய இரண்டு சிறுமிகளை, மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், லோஹர்தகா மாவட்டம், பாக்டு காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இரண்டு சிறுமிகள். இவர்கள், கடந்த 24ஆம் தேதி இரவு, தங்களுடைய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்காக சென்றனர். விழா முடிந்து வீட்டிற்கு திரும்பிய இரண்டு சிறுமிகளை, அங்கு வந்த 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் வழிமறித்துள்ளனர். மேலும், அவர்கள் அந்த சிறுமிகளை வலுக்கட்டாயமாக இழுத்து கொண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து, அந்த சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர்கள், இந்த சம்பவம் குறித்து பாக்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், பூஷாத் மற்றும் கங்குபர் கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு சிறுமிகள்கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arrest incident Jharkhand
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe