மணல் அள்ளும்போது ஏற்பட்ட மணல் சரிவில் 11 பெண்கள் பலி...

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் திலேர் கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்தபோது மண் சரிந்ததில், அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த 11 பெண் தொழிலாளர்கள் மண்ணிற்குள் புதைந்தனர்.

11 people lost their life in landslide happened in telangana

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அந்த பகுதியில் நடைபெற்ற பணியில் மணல் அள்ளியபோது அங்கிருந்து மேடான பகுதியிலிருந்து மணல் சரிந்ததாகவும், அதற்கு கீழே வேலை பார்த்து கொண்டிருந்த பெண்கள் மணலில் உயிருடன் புதைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் அனுராதா (30), பீமம்மா (40), புத்தம்மா (26), பி. லக்ஷ்மி (28), கே.லக்ஷ்மி (30), மங்கம்மா (32), அனந்தம்மா (45), கேசம்மா 38), பி அனந்தம்மா (35), லக்ஷ்மி (28) ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆறுதலையும் வேதனையையும்தெரிவித்துள்ளார்.

telangana
இதையும் படியுங்கள்
Subscribe