மிசோரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலை தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி மிசோரம் மாநிலத்தில் 49 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 33.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 49 சதவீதம் பதிவாகியுள்ள மிசோரம் மாநிலத்தில் முதியவர்களும் ஆர்வமுடன் காலை முதல் வாக்களித்து வருகின்றனர். இதில் 106 வயது மூதாட்டி ஒருவர் சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கை செலுத்தினார். இந்த வயதிலும் வாக்களிக்க வந்த இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்த 106 வயது மூதாட்டி...
Advertisment