ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100 ஆம் ஆண்டுநினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Advertisment

100 years of jallianwala bagh massacre

பஞ்சாபில் 1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 ஆம் தேதி சுமார் 7 ஏக்கர் அளவுள்ள அந்த மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேய ஜெனரல் டயர் சுட்டு கொன்றான். மைதானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு 1650 ரவுண்டுகள் துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டு. இதில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக இந்தியா சார்பாக அமைக்கப்பட்ட குழு அறிவித்தது. ஆனால் 375 பேர் மட்டுமே இறந்ததாக ஆங்கிலேய அரசு தெரிவித்தது. இந்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய வன்முறையான இதன் 100 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Advertisment

இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது. நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க ஜாலியன் வாலாபாக் நினைவு உத்வேகம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment