karnataka apartmnt

கர்நாடக மாநிலம் பெங்களூருவின்பிலேகாலி பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில், கடந்த 11 ஆம் தேதி 7 பேருக்கும் அதற்கடுத்த நாள் 17 பேருக்கும் கரோனாதொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அந்த அபார்ட்மெண்டில் வசிக்கும்1,190 பேருக்குகரோனாபரிசோதனை நடத்தப்பட்டது.

Advertisment

இந்தப் பரிசோதனையில் 103 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அபார்ட்மெண்டில் உள்ள அனைவரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த அபார்ட்மெண்ட், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனாஉறுதியான 103 பேரில், 96 பேர் 60 வயதிற்குமேற்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

Advertisment

கடந்த பிப்ரவரி6 மற்றும் 7 ஆம் தேதிகளில், அந்த அபார்ட்மெண்டில் இரண்டு திருமணநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தின்போது கரோனாதொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.