atm liquor

Advertisment

பிஹார் மாநிலம், கயாவிலுள்ள தோபி என்னும் பகுதியில் சுங்கத்துறை நடத்திய திடீர் சோதனையில் ஏடிஎம் க்காக பணம் கொண்டு செல்லப்படும் வாகனத்தில் 100 பெட்டிகளில் மது பிடிப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் நடத்திய சோதனையில் 100 பெட்டிகளில் கடத்தப்பட்ட மது சிக்கியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சுங்கத்துறை ஏசி கூறுவதாவது: பொகாராவில் இருந்து முசாப்பர்பூர் என்னும் இடத்திற்கு கடத்தப்பட்ட மதுவை எடுத்து செல்ல இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எந்த வங்கியின் பெயரில் இவர்கள் வேனை எடுத்தனர் என்பது தெரியவில்லை