
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் 10 வயது சிறுமி தண்ணீர் லாரி மோதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வந்த 10வயது சிறுமி லியோரா ஸ்ரீ என்பவர் இன்று அவருடைய தாய் கீர்த்தியுடன் வழக்கம்போல இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச்சென்றுள்ளார். அப்போது சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார் சிறுமி. அப்போது சிறுமி லியோரா ஸ்ரீமீது எதிர்பாராத விதமாக தண்ணீர் லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)