10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்தது தொடர்பான வீடியோ சாட்சியங்கள் இருந்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்க அலட்சியம் காட்டியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Childb_6.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 50 வயது நபர் மொய்தீன். திரிதலா பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தியேட்டர் ஒன்றில் படம் பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தொடர்ந்து இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக மொய்தீன் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தர, அந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகளை தியேட்டர் உரிமையாளர் குழந்தைகள் நல மையத்திற்கு வழங்கிய நிலையில், காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காவல்துறையினர் இந்த வழக்கில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தாமதம் செய்துள்ளனர். இதையடுத்து, இந்த வீடியோ காட்சிகள் நேற்று கேரளாவின் மாநில ஊடகங்களில் வெளியான நிலையில், சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பவம் நடந்த இடம் பற்றிய தகவல்கள் இல்லாததால் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என காவல்துறை விளக்கமளித்துள்ளது.
அதேசமயம், மொய்தீன் வந்த பென்ஸ் காரின் எண்ணை வைத்து கைது செய்திருக்கலாம். காவல்துறையினர் மொய்தீனைக் கைது செய்வதில் அலட்சியம் காட்டியதில் உள்நோக்கம் உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், மொய்தீன் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். சம்மந்தப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியபிறகே வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)