Advertisment

வங்கிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு... 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு...

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக சமீபத்தில் மத்திய அரசு 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக செயல்படும் என அறிவித்தது. இதற்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

bank

இந்த நிலையில் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 22-ந்தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. வங்கி ஊழியர்களின் இந்த போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.

aituc Indian economy Banks
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe