
தொடர்ந்து ஏடிஎம்மில் பணமில்லைஎன்றால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அபராதம் விதிக்கப்படும் முறையைரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கொண்டுவர இருக்கிறது.
வங்கி ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும்அதுதொடர்பானநடைமுறைகள்குறித்தும்ரிசர்வ் பேங்க்ஆஃப்இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, வங்கி ஏடிஎம்களில் தொடர்ந்து 10 மணிநேரம்பணம் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனரிசர்வ் பேங்க்ஆஃப்இந்தியா அறிவித்துள்ளது. எனவே வங்கிகள் தங்களுக்கானஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளரிசர்வ் பேங்க்ஆஃப் இந்தியா, இந்தப் புதிய நடைமுறை வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதிமுதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.