ADVERTISEMENT

10% இட ஒதுக்கீடு செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

11:10 AM Nov 07, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் இன்று (11/07/2022) தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் நான்கு விதமான தீர்ப்பை அளித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அப்போது நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, "10% இட ஒதுக்கீடு இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு, அரசியலமைப்பை மீறவில்லை. 50% உச்ச வரம்பை மீறவில்லை. அனைவரும் இலக்குகளை அடையத் தேவையான கருவியாக இட ஒதுக்கீடு பயன்படுகிறது. எனவே, பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது சரியே" என்றார்.

அதேபோல், 10% இட ஒதுக்கீடு வழங்கியது சரியே என்று, நீதிபதிகள் பெலா திரிவேதி, தினேஷ் மகேஸ்வரி, பர்திவாலா ஆகிய மூன்று பேர் தீர்ப்பளித்துள்ளனர். மேலும், 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என நீதிபதிகள் யு.யு.லலித், ரவீந்திர பட் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நான்கு நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT