Advertisment

10 சதவீத இடஒதுக்கீடு சட்டவிரோதம்... மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில்!

 10 Reservation is illegal ... Central Government

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக நடைபெறுகின்றன.இந்த நேரத்தில், தமிழகத்தில் மருத்துவம் பயில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதைப் போன்று, புதுச்சேரி அரசுமருத்துவ படிப்பிற்கு10 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவித்திருந்தது. இந்நிலையில், புதுச்சேரி அமைச்சரவைகொண்டுவந்த10 சதவீதம் உள் ஒதுக்கீடுநிராகரிக்கப்பட்டதாகசென்னை உயர் நீதிமன்றத்தில்மத்திய அரசு பதிலளித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் மருத்துவம் பயில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதைப் போன்று, புதுச்சேரி அமைச்சரவை மருத்துவ படிப்பிற்கு10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியிருந்தது. புதுச்சேரி அமைச்சரவையின் இந்த முடிவை ஏற்காதஆளுநர், அதை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்க தாமதிப்பதாக புதுச்சேரியைச் சேர்ந்த திவ்யதர்ஷினி என்ற மாணவி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், புதுச்சேரி அரசுமருத்துவ படிப்பிற்குகொண்டுவந்த10 சதவீதம் உள் ஒதுக்கீடு நிராகரிக்கப்பட்டதாகவும்,புதுச்சேரி அமைச்சரவையின் இந்தஉள் ஒதுக்கீடுமுடிவு சட்டவிரோதம் என்றும்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

Advertisment

Medical Student highcourt Central Government
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe