வெளுத்து வாங்கும் கனமழை; ஒரு நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்த சோகம்!

10 people lost their lives for Heavy rains kerala

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், தென்மேற்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. தமிழகத்தை போலவே, பெங்களூருவிலும் கனமழை பெய்து பல இடங்களில் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

அதே நேரத்தில், கேரளா மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக ஆலப்புழா, கோட்டையம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகள், வீடுகள் உள்ளிட்டவற்றில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி நேற்று (30-05-25) மட்டும் 10 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக பிரிந்து கேரளாவிற்கு சென்றுள்ளனர். ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த 120 வீரர்கள் சாலை மார்க்கமாக விரைந்தனர். பத்தினம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Kerala rain
இதையும் படியுங்கள்
Subscribe