
அமர்நாத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் வெள்ளம் உருவான நிலையில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பலர் காணாமல் போய் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் அங்கு மேக வெடிப்பு ஏற்பட்டு பத்து பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்குயாத்திரையானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமர்நாத் யாத்திரையின் போது ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் எனவும் மோடி தன் டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
Follow Us