style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அரசு பேருந்து விபத்துக்குள்ளாகிஉத்தரகாண்ட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்டில் ரிஷிகேஷ் கங்கோத்ரி சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சூரியதார் என்ற என்ற மலைப்பகுதியில் செல்லும்பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துநிலை தடுமாறி 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்ட்டுள்ளனர்.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்குஅரசுதலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. மேலும் மீட்புப்பணிகள் ஹெலிகாப்டர் உதவியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்து பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.