Advertisment

திருப்பதி வனப்பகுதியில் 10 பேர் கைது

10 people arrested in Tirupati forest

திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்கு நுழைந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை மாநில வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

கைது செய்யப்பட்ட 10 பேரும் திருவண்ணாமலை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. வனப்பகுதியில் கைது செய்யப்பட்ட 10 பேரிடமிருந்து ஏழு கோடாரிகள்,ஒரு மோட்டார் சைக்கிள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னரே ஆந்திர வனப்பகுதிகளில் செம்மரம் வெட்ட முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு செம்மரம் வெட்ட முயன்றதாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisment
Tirupati
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe