ADVERTISEMENT

10 மாத குழந்தைக்கு இரும்பு கம்பியால் சூடு! - மூட நம்பிக்கையால் விபரீதம்

05:04 PM Jun 15, 2018 | Anonymous (not verified)

10 மாத குழந்தைக்கு இரும்புக் கம்பியால் சூடு வைத்த நிலையில், தற்போது குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாட்டில் பொதுமருத்துவம் சென்றுசேராத பல்வேறு பகுதிகளில், இன்னமும் பல மூட நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. உள்ளூர் ஆட்களால் செய்யப்படும் இதுபோன்ற மருத்துவங்களில், சூடுவைத்தல், கூர்மையான ஆயுதங்களால் கிழித்துவிடுதல் போன்ற சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், பிறந்து 10 மாதங்களே ஆன ஆண் குழந்தைக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்த, சூடான இரும்புக் கம்பியால் கழுத்தில் சூடு வைத்துள்ளனர்.

இதனால், மோசமான தீக்காயம் ஏற்பட்ட குழந்தை தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. ராஜஸ்தானின் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பேய் ஓட்டுவதாகக் கூறி இளம்பெண்ணுக்கு சூடு வைத்ததில், 25 சதவீத காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT