ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு உள்ளிட்டவற்றில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவில் கார்த்தி சிதம்பரம் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இம்மாதம் தொழில் ரீதியாக , அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டியிருப்பதால் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு கொடுத்திருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/23_5.jpg)
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு ரூ.10 கோடி பிணையத் தொகையுடன், அனுமதி வழங்குவதாக நீதிபதிகள் உத்தரவு கொடுத்தனர். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு முன்பாக 10 கோடி ரூபாயை பிணையத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்தி விட்டுச் செல்வதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதை கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் குறிப்பிட்டு சொல்லி, வாதாடினார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மேலும் ஒரு 10 கோடி ரூபாயை பிணையத் தொகையாக செலுத்தலாமே. உங்களது கட்சிக்காரர் இந்த பணத்தை செலுத்துவதற்கு கஷ்டப்படுபவர் இல்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து மேலும் 10 கோடி ரூபாயை பிணையத் தொகையாக வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)