மஹாராஷ்ட்ராமாநிலம், அகமதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையின்அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று (06.11.2021) காலை 11 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் சிக்கி கரோனா நோயாளிகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேருக்குப் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்ட்ராஅரசு, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்ரே, இந்த தீவிபத்து குறித்து ஆய்வுசெய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தீ விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தீவிபத்தில் உயிரழப்புஏற்பட்டது வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.