பினாமி சொத்துக்களை கண்டறியவும்அவற்றை பறிமுதல் செய்யவும் மத்திய அரசு பல தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றது. அதன் தொடர் நடவடிக்கையாகதற்போது மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில் பினாமி சொத்துக்கள் பற்றிய தகவலளிப்போருக்கு ஒரு கோடி சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/download (2)_2.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பினாமி சொத்துக்கள் குறித்த தகவலை ஆதாரங்களுடன் ஒரு தனி நபரோ அல்லது குழுவோ அந்தந்த வட்டார வருமானத்துறை இணை ஆணையர் அல்லது கூடுதல் ஆணையரிடம் தகவல் அளிக்கலாம். அதிகாரிகள் கொடுக்கும் விண்ணப்பத்தில் பினாமி சொத்துக்கள் பற்றிய தகவலை பூர்த்தி செய்து கொடுத்தால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல் வெளிநாட்டில் உள்ள பினாமி சொத்துக்கள் பற்றியும் இதே முறையில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போர் வெளிநாடுகளை சேர்ந்தவர் என்றால் இணைய அஞ்சல், கடிதம் அல்லது இந்திய தூதரகங்களில் உள்ள வருமான துறைஅதிகாரியிடம் தகவல் அளிக்கலாம். முதல் கட்ட விசாரணையில் கொடுத்த தகவல் உண்மையானது என்று தெரியவந்தால் அந்த தகவலை கொடுத்தவருக்கு இரண்டுவாரத்தில் 1% பரிசு தொகை வழங்கப்படும். முழுவதும் நிரூபிக்கப்பட்டால் 6 வாரத்திற்கு பிறகு முழு பரிசு தொகையும் வழங்கப்படும் .
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/641215-rupeesnewcurrency1.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பரிசு தொகைக்கான உச்சவரம்பு 1 கோடி அதேபோல் வெளிநாட்டிலுள்ள பினாமி சொத்துக்கள் பற்றிய தகவலுக்குகான பரிசு தொகைக்கான உச்சவரம்பு 5 கோடி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அல்லது அரசு நிறுவனம் சார்ந்த ஊழியர்கள் தகவல் தெரிவித்தால் பரிசு தொகை வழங்கப்பட்ட மாட்டாது. அதேபோல் தகவல் அளிக்கும் தனிநபர் மற்றும் குழுக்கள் பற்றிய தகவல் மத்திய அரசால் ரகசியமாக காக்கப்படும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாகக்கூட தகவல் அறிவித்தவர் பற்றிய விவரங்களை அறிய முடியாது. தகவல்கள் தவறாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)