Skip to main content

பாதுகாப்பற்ற நிலையில் ஒரு கோடி ஆதார் விவரங்கள்! - பிரான்ஸ் ஆய்வாளர் தகவல்

Published on 04/03/2018 | Edited on 04/03/2018

ஆதார் விவரங்கள் திருடுபோகும் நிலையில் இருப்பதை பிரான்ஸைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.

 

தெலுங்கானா மாநில அரசின் நலஉதவித் திட்டங்கள் குறித்து தகவல் வெளியிடும் இணையதளம் 'tspost'. இந்த இணையதளப் பக்கத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 56 லட்சம் பேர் மற்றும் பென்சன் பெறும் 40 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

 

 

 

 

பிரான்ஸைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் பாப்டிஸ்ட் ராபர்ட் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் அடிப்படை எஸ்.க்யூ.எல். இன்ஜெக்‌ஷன் முறை மூலம் அந்த இணையதளம் ஹேக்கிங் செய்யுமளவுக்கு பலவீனமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இதன்மூலம், பல முக்கியமான தகவல்கள், ஆதார் விவரங்கள் உட்பட சுலபமாக திருடுபோகும் நிலையில் இருப்பதாகவும் விளக்கியுள்ளார். இதுகுறித்து தகவல் வெளியிட்டபோது, தெலுங்கானா அரசு சரிசெய்வதாக அறிவித்திருக்கிறது. சிறந்த வெப் டிசைனர்களை வைத்து அவர்கள் இதுமாதிரியான விவரங்களைப் பாதுகாக்க வகை செய்யவேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.

 

 

 

 

இதற்கு பதிலளித்துள்ள தெலுங்கானா அரசு தரப்பு, ‘பிரச்சனை இருப்பதை அறிந்து, தற்போது இணையதளம் ஆஃப்லைனில் வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பிரச்சனை தீர்க்கப்படும்’ என தெரிவித்திருந்தது.

 

மீண்டும் மாலை ட்விட்டரில் வந்த பாப்டிஸ்ட் ராபர்ட், ‘இணையதளத்தை ஆஃப்லைனில் வைத்திருக்கிறார்கள். எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை’ என கிண்டலடிக்கும் விதமாக அவர் பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதார் தகவலை திருடி வாக்கு சேகரிக்கும் பாஜக? - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

 

ஆதார் தகவலை திருடி வாக்கு சேகரிக்கும் பாஜக? - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!


தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் பூத் அளவிலான வாக்காளர்களுக்கு பாஜக வாட்ஸ்-அப் குழுவில் இணையுமாறு இணைப்புடன் (லிங்) குறுஞ்செய்திகள் வருவதாகக் கூறியுள்ளார்.


மேலும் அவர், ஆதார் அட்டையில் அளிக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணில் மட்டுமே அவ்வாறான குறுஞ்செய்திகள் வருவதாகவும், மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆதார் தகவல்களைத் திருடியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் புகார் மிகத் தீவிரமானது எனக் கூறி, இதுகுறித்து விசாரித்து வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

 

 

 

Next Story

சமூகவலைதள கணக்குகளுடன் ஆதார் இணைக்கக்கோரிய வழக்கு... வழிகாட்டுதல் குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு! 

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

தொழில்நுட்பம் ஆபத்தான பாதையை நோக்கி திரும்பி இருப்பதால் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 Aadar number linked to social network accounts ... Court order to set up guidance panel!


பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்க வேண்டி உத்தரவிட வேண்டும் என்ற வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் தீபக், அனிருத்தா போஸ் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவது, இணையதளத்தை பயன்படுத்தி நிகழ்த்தப்படும் குற்றங்களை கண்டு பிடிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இது அறிவியல் பூர்வமான விவகாரம் எனவே உச்ச நீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ இது குறித்து முடிவு செய்வது உரிய ஒன்றாக இருக்காது என கருத்து தெரிவித்த நீதிபதிகள்.

 

 Aadar number linked to social network accounts ... Court order to set up guidance panel!


இணையதள குற்றங்களை நிகழ்த்துபவர்களை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை என்று கூறி விலகிவிட முடியாது. அதேபோல் ஒன்றை செய்வதற்கு தொழில்நுட்பம் உள்ள பொழுது அதை தடுப்பதற்கும் நிச்சயம் தொழில்நுட்பம் இருக்கவேண்டும் என சுட்டிக்காட்டினர்.

ஆபத்தான பாதையில் தொழில்நுட்பம் திரும்பி இருப்பதால் இணையதள குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழிகாட்டு நெறிமுறைகளை அமைப்பதற்கான கால அவகாசம் குறித்து மூன்று வாரங்களில் மத்திய அரசு பதில் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.