Advertisment

“மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்” - ஐ.நாவில் பாகிஸ்தானை விமர்சித்த இந்தியா!

harish

India criticizes Pakistan at the UN

ஐ.நா அமைப்பின் 80வது ஆண்டு விழாவான யுஎன் 80 (UN80)பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று (24-10-25) நடைபெற்றது. இதில், ‘ஐக்கிய நாடுகள் அமைப்பு; எதிர்காலத்தைப் பார்ப்பது’ என்ற விவாதம் நடந்தது. இந்த விவாவத்தில் பங்கேற்று பேசிய இந்தியாவின் நிரந்திர பிரதிதி பர்வதனேனி ஹரிஷ், பாகிஸ்தானை கடுமையாக சாடினார். அதில் அவர் பேசியதாவது, “ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்தியாவின் காலத்தால் சோதிக்கப்பட்ட ஜனநாயக மரபுகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின்படி தங்கள் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துகிறார்கள். நிச்சயமாக, இவை பாகிஸ்தானுக்கு அந்நியமான கருத்துக்கள் என்பதை நாங்கள் அறிவோம். 

Advertisment

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது, உள்ளது, எப்போதும் இருக்கும். பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் கடுமையான மற்றும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் பாகிஸ்தானை அழைக்கிறோம், அங்கு பாகிஸ்தானின் இராணுவ ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, மிருகத்தனம் மற்றும் வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவதற்கு எதிராக மக்கள் வெளிப்படையான கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறினார்.

Advertisment

சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மாட்ரே தாரா கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

united nation. Pakistan UN
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe