Advertisment

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவி நீக்கத் தீர்மானம்; இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மனு!

india-allaince-mp-om-birla-gr-swaminathan

இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 01ஆம் தேதி (01.12.2025)  தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் மொத்தம் 15 அமர்வுகளுடன் டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நோட்டீசை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

அப்போது திமுக எம்.பி,க்களான கனிமொழி, டிஆர் பாலு, ஆ. ராசா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மார்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின்  எம்பி சு. வெங்கடேசன், சமாஜ்வாதி கட்சியின்  தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கௌரவ் கோகாய், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

Advertisment

அதாவது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் 120 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனுவானது  வழங்கப்பட்டுள்ளது. அதில் திருப்பரங்குண்டம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு  சமூக பாதுகாப்பிற்கு எதிராக இருக்கிறது. எனவே அவர் நீதிபதியாக நீடிப்பதற்கு தகுதி இல்லாதவர் என்றும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பல்வேறு வழக்குகளில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இது போன்று தீர்ப்புக்கள் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் இன்று (09.12.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதிடுகையில், “தீபம் ஏற்றும் 4 நாட்கள் நிறைவடைந்துவிட்டன” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “இது தீபம் ஏற்றும் வழக்கு மட்டுமல்ல. சொத்துரிமை சார்ந்ததும் கூட ஆகும்” எனத் தெரிவித்துள்ளது குறிப்ப்டத்தக்கது.

INDIA alliance Justice G.R. Swaminathan Parliament SPEAKER OM BIRLA Thiruparankundram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe