தற்காலத்தில் பல்வேறு காரணங்களால் நிலம், நீர், காற்று ஆகிய இயற்கை வளங்கள் தொடர்ந்து மாசடைந்து வருவதாக உலகளவிலான சுற்று சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இது உலகளாவிய பிரச்சனை என்பதால் அனைத்து நாடுகளும் இந்த மாசு கட்டுப்பாட்டை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இத்தகைய மாசடைதல் பிரச்சனைகளால் பல்வேறு நகரங்கள் வாழாத்  தகுதியற்ற இடங்களாக மாறிவருவதாகவும் கூறப்படுகிறது.  

Advertisment

நம் நாட்டிலும் இத்தகைய பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில்,  மாசடைதலால் பல்வேறு நகரங்கள்  பாதிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக கற்று மாசு என்பது மனிதர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் தலைநகர் டெல்லியில் கற்று மாசு என்பது அம்மக்களுக்கு மிக நீண்ட காலமாகவே பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. காற்று மாசு அதிகரிப்பின் காரணமாக, டெல்லி அரசு சில சட்ட வரைமுறைகளை கொண்டுவந்துள்ளது. அதன் படி நிலக்கரி மற்றும் விறகு சார்ந்து எரியூட்டும் அடுப்புக்களை தடை செய்துள்ளது. திறந்த வெளியில் குப்பை அல்லது வேறு ஏதேனும் எரிக்கவும் டெல்லி மாசு கட்டுப்பட்டு குழுமம் தடை விதித்துள்ளது. உணவகங்கள் மற்றும் சாலையோரக் கடைக்களுக்கும் இது பொருந்தும் எனவும் கூறியுள்ளது. மீறினால் ரூ 5,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

Advertisment

தொடர்ந்து அதிகரித்து வரும் மாசடைதல் காரணமாக காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், இதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். 1981 மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் மற்றும் தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு, அனைத்து உணவகங்களும் மின்சாரம் அல்லது எரிவாயு அடுப்புகளுக்கு மாறவேண்டும் எனவும் வலியுத்துகிறது. காற்றின் மாசுபாட்டை குறைக்கவும் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும் இந்த உத்தரவு அமல் படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.