'Increase the Pongal prize to Rs. 8,000' - BJP urges the Chief Minister! Photograph: (BJP)
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
Advertisment
பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தையொட்டி தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கம்.
Advertisment
அந்த வகையில் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000/ வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959/- செலவில் வழங்கப்படும். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'பொங்கல் பொருட்களுடன்,பொங்கல் பரிசு ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ.8000 ஆக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்’ என பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து அவர், முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், 'அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக 2,500 வழங்கப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் 2025 ஆம் ஆண்டு வரை, முந்தைய அதிமுக அரசு தந்தது போல பொங்கல் பரிசாக வழங்கியிருக்க வேண்டிய தொகை 10,000 ரூபாய். ஆனால், அதில் வெறும் 2,000 ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கியிருக்கிறது. 8,000 ரூபாய் பாக்கி வைத்திருக்கிறது. தற்போது தேர்தல் வருவதால் 3,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியும் 5,000 ரூபாய் பாக்கியிருப்பதால், 8,000 ரூபாயாக உயர்த்தி பொங்கல் பரிசை அறிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருக்கிறார் பாஜக ஏ.என்.எஸ். பிரசாத்.
Follow Us