Increase in water flow in Cauvery Photograph: (water)
தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, திருப்பூர், விருதுநகர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மறுபுறம் காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திற்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் தமிழகத்திற்கான நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது 24,000 கன அடியாக உயர்ந்துள்ளது தொடர்ந்து. நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. காவிரியில் நீர்வரத்து காரணமாக நடப்பாண்டிலேயே மேட்டூர் அணை ஐந்தாவது முறை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.