Income Tax Department warns jayalalitha’s properties will be auctioned
ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி ரூ.13 கோடியை செலுத்த வேண்டும் என அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த வழக்கு இன்று (05-02-26) விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் தவணை முறையில் ரூ.1.12 கோடி செலுத்தியுள்ளார். ஆனால், தீபா இதுவரை வரியை செலுத்தவில்லை. 2026 ஜனவரி 31 வரை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 17 ஆயிரத்து 962 ரூபாய் வருமான வரி பாக்கி உள்ளது. எனவே ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் அவரது சொத்துகள் ஏலம் விடப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது.
Follow Us