Advertisment

தொழில் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!

it-raid
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 
Advertisment
சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரும்புப்பொருள் தயாரிக்கும் தொழில் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (18.08.2025) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 
முன்னதாக இந்த  நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai INCOME TAX DEPARTMENT it raid kanchipuram Vellore
இதையும் படியுங்கள்
Subscribe