நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி (28.01.2026) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர், வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். இந்த கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வான 2026-27ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 01ஆம் தேதி (01.02.2026) காலை 11 மணியளவில் தாக்கல் செய்து உரையாற்றினார். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் (வரும் 13ஆம் தேதி வெடிகுண்டு வெடிக்கும்) மற்றும் பள்ளிகளுக்கு இ - மெயில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் நாடாளுமன்றத்தில் கூடுதலாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி காவல்துறையின் சார்பில் தெரிவிக்கையில், “தெற்கு டெல்லியில் உள்ள 3 பள்ளிகள் உட்படத் தலைநகரில் உள்ள 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு தாக்குதல் மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இதனையடுத்து டெல்லி காவல்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படையினர் சம்பவ இடங்களில் உள்ளனர். இது தொடர்பான அனைத்து அழைப்புகளும் காலை 08:30 மணி முதல் 9:00 மணி வரை வந்தன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/09/central-vista-police-2026-02-09-10-39-39.jpg)