பெண் குழந்தை மீது தாக்குதல்; டே கேர் மையத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

day-care-up

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் டே கேர் (Day care centre) மையங்கள் எனப்படும்  குழந்தை பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. குழந்தை பராமரிப்பு மையம் என்பது வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளை பகல் நேரத்தில் பராமரிக்கும் மையம் ஆகும். அங்கு குழந்தைகளை பராமரிப்பதற்காக பெற்றோர்கள் இந்த மையங்களில்  குழந்தைகளை விடுகின்றனர். அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் குழந்தைகளை பாதுகாக்கும் டே கேர் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிறந்து 15 மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று இந்த மையத்தில்  அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த பெண் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததுள்ளது. இதனால் அம்மையத்தின் பராமரிப்பாளர் சிறிதும் இரக்கமின்றி அந்த குழந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். அதோடு குழந்தையின் தலையை சுவரில் மோதுச் செய்து கொடூரமாக தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரின் மனதை பதை பதைக்க வைக்கிறது.

மேலும் குழந்தையின் உடலில் பற்களால் கடித்த காயமும் இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட டே கேர் மையத்தின் பராமரிப்பாளரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். டே கேர் மையத்தில் பச்சிளம் குழந்தை என்றும் கூட பாராமல் குழந்தையின் தலையை சுவரில் மோத செய்து கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

Child Care incident noida uttar pradesh
இதையும் படியுங்கள்
Subscribe