திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற இருளப்பன். இவர் மீது பல்வேறு கொலை கொள்ளை வழிப்பறி மற்றும் கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள், காவல்துறையால் பதியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இவரைக் கைது செய்ய போலீசார் தேடிச் சென்றனர்.
அச்சமயத்தில் ரவுடி விக்னேஷ், சிறப்புச் சார்பு ஆய்வாளர் ஜான்சன் என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் தற்காப்புக்காக விக்னேஷை நோக்கி துப்பாக்கியில் சுட்டனர். இதில் அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதனையடுத்து காயமடைந்த சிறப்புச் சார்பு ஆய்வாளர் ஜான்சனும், படுகாயமடைந்த ரவுடி விக்னேஷும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குற்ற சம்பவங்களில் தொடர்புடைய பிரபல ரவுடியைப் பிடிக்க முற்படும் போது சிறப்புச் சார்பு ஆய்வாளர் மீது அரிவாளால் வெடி தாக்குதல் நடத்திய ரவுடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us