குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் 15 வயது சிறுமி, புதன்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் இயற்கை உபாதையைக் கழிக்க தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அந்த சமயத்தில், அந்த இடத்தில் இருந்த, அந்த சிறுமிக்கு நன்கறியப்பட்ட 3 பேர் இரு சக்கர வாகனங்களுடன் அங்கு நின்றிருந்தனர். அவர்கள் அந்த சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றுள்ளனர். அப்போது, அந்த மூன்று பேரில் ஒருவர், மேலும் சில நண்பர்களுக்கு போனில் குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு தகவல் கொடுத்துள்ளார். 

Advertisment

அந்த தகவலின் பேரில் மேலும் 5 பேர் அங்கு வந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சிறுமியை கடத்தி சென்ற நபர்கள், 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று அங்குள்ள தடுப்பணைக்கு அருகில் மற்ற ஐந்து பேரும் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்த ஒரு நீர்த்தேக்கத் தொட்டிக்கு அருகில் இருந்த ஒரு அறையில் அந்த சிறுமியை மிரட்டி, ஒருவர் பின் ஒருவராக அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு, 8 பேரும் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

Advertisment

இதற்கிடையில் புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் சிறுமியின் தந்தை, சிறுமி வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பு, குடும்பத்தினர் இரவு முழுவதும் அந்த பகுதியில் சுற்றி தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் சிறுமிய காணவில்லை. அதன் பின்னர் வியாழக்கிழமை அதிகாலையில் வீட்டின் அருகில் இருந்த, சிறுமியின் வீட்டினருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனத்தில் அந்த சிறுமி மோசமான நிலையில் இருந்துள்ளார். அப்போது. சிறுமியை இந்த நிலையில் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியிடம் நடந்தவற்றை பற்றி கேட்டனர். 

arrest

சிறுமி, தான் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது 3 பேர் சேர்ந்து தன்னைக் கடத்தியதாகவும், பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த 5 போரையும் சேர்த்து மொத்தம் 8 பேரும் தன்னை பாலியியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் தன்னை அதே இடத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும். அதன் பின்னர் தான் நடந்தே வீட்டிற்கு வந்ததாகவும் அந்த சிறுமி தெரிவித்தார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த குடும்பத்தினர். இது குறித்து வியாழக்கிழமை அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  

Advertisment

இந்த சம்பவம் குறித்து பேசிய சிக்லி துணை காவல் கண்காணிப்பாளர் பி.வி. கோஹில், "புகாரின் அடிப்படையில், போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஏழு பேர் 20 - 21 வயதுக்குட்பட்டவர்கள், ஒருவர் சிறார் ஆவார். குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் கைது செய்யப்பட்டு, 7 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்