Advertisment

நடுக்கடலில் மிதந்து வந்த சாக்கு மூட்டை; பிரித்துப் பார்த்து அதிர்ச்சியடைந்த  மீனவர்கள்!

Untitled-2

தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரை சாலை வழியாகவே கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆந்திராவிலிருந்து சொகுசு கார்கள், சரக்கு வாகனங்களில் கடத்தி வரப்படும் கஞ்சா மூட்டைகள், கிழக்கு கடற்கரை கிராமங்களில் பதுக்கி வைக்கப்பட்டு, நள்ளிரவு நேரங்களில் மீன்பிடி படகுகள் மூலம் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு, இலங்கைக்கு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. நடுக்கடலில் நவீன படகுகளில் காத்திருக்கும் கடத்தல்காரர்கள், கஞ்சா மூட்டைகளைப் பெற்றுக்கொண்டு, தங்கம் போன்ற வேறு கடத்தல் பொருட்களை இந்தியாவுக்கு கடத்துவதும் வழக்கமான நிகழ்வாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே, வடக்கு புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த வல்லரசு மற்றும் சில மீனவர்கள், ஒரு படகில் கடலுக்குள் 14-வது கடல் மைலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கம் ஒரு சாக்கு மூட்டை மிதந்து வருவதைப் பார்த்து, அந்த மூட்டையை மீனவர்கள் மீட்டு, படகில் ஏற்றியுள்ளனர். படகில் ஏற்றிய சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்த மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த மூட்டையில், பண்டல் பண்டலாக கஞ்சா இருந்துள்ளது. உடனே, திருச்சி கஸ்டம்ஸ் அலுவலகத்திற்கு மீனவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், மீனவர்கள் மீட்டு வந்த மூட்டையைப் பெற்று, பிரித்துப் பார்த்தபோது, 2 கிலோ எடையுள்ள 20 பண்டல்கள் இருந்துள்ளன. அதனைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

Untitled-1

கஞ்சா இலைகளைப் பிளாஸ்டிக் பைகளில் வைத்து, அதன்மேல் டேப் ஒட்டி, தண்ணீர் போகாத அளவில் பாதுகாப்பாக வைத்து, பண்டல்களை அடுக்கி, மேலே பிளாஸ்டிக் கவர் போட்டு, அதன்மேல் 2 சாக்கு பைகள் வைத்துக் கட்டி, பாதுகாப்பாக இருந்துள்ளது. இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த கஞ்சா மூட்டைகளை, நடுக்கடலில் மீனவர்கள் பார்த்துவிட்டதால், அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல, மீனவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப, ஒரு கஞ்சா மூட்டையை மட்டும் தண்ணீரில் தள்ளிவிட்டு, கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றனரா, இல்லை கடத்தல் படகிலிருந்து தவறி விழுந்திருக்குமா என்று விசாரணை நடந்து வருகிறது.

srilanka Fishermen police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe