தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கானாபூர் கேட் அருகே தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்தும் (TGSRTC) லாரியும் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் 16 பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக  மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisment

தெலங்கானாவில் அரசு  பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 16 பேர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தேவையான நிவாரண நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அதோடு  பேருந்து விபத்தில் காயமடைந்த அனைவரையும் உடனடியாக ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லவும், சிறந்த மருத்துவச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்யவும் தலைமைச் செயலாளருக்கும், போலீஸ் டிஜிபிக்கும், முதல்வர் ரேவந்த் ரெட்டி, உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

முன்னதாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்குச் சென்ற ஆம்னி பேருந்து கடந்த வாரம் (24.10.2025) விபத்தில் சிக்கி தீ விபத்து ஏற்பட்டது. இதில் அச்சமயத்தில் பேருந்து வேகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில் தீயானது பேருந்து முழுவதும் வேகமாக திடீரென்று பரவியது. இதில் 20 பேர் பலியான சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.