தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மூவர் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். 

Advertisment

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் 10ற்கும் மேற்பட்ட வீடுகளில் மர்ம நபர்களால் கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் 56 சவரன் தங்கம், ரூ.3 லட்சம் ரொக்கம் திருட்டுப் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. 

Advertisment

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களான, தொடர் திருட்டு சம்பத்தில் ஈடுபட்டு வந்த மூவர் குனியமுத்தூர் பகுதியில் கோவை மாநகர போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கொள்ளையர்கள் மூவரையும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். கொள்ளையர்களை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.