இரண்டு பழங்குடியின சிறுமிகள் ஐந்து ஆண்கள் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஒடிசாவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள், 8 மற்றும் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள், நேற்று இரவு தங்களுடைய இரண்டு நண்பர்களுடன் அருகிலுள்ள கிராமத்திற்கு தியேட்டரில் படம் பார்க்கச் சென்றுள்ளனர். படம் முடிந்து வீடு திரும்பும் போது, ஐந்து ஆண்கள் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், அவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர்.

Advertisment

அதனை தொடர்ந்து அந்த கும்பல், இரண்டு நண்பர்களைத் தாக்கி சிறுமிகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து தப்பித்து வந்த சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் கடும் கண்டனம் தெரிவித்து ஆளும் பா.ஜ.க அரசை விமர்சனம் செய்து வருகிறது. கடந்த 16 மாதங்களில் ஒடிசாவில் 5,000க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ல்ஹாகவும், இது பா.ஜ.க அரசாங்கத்தின் கீழ் பெண்களின் மோசமான நிலையை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

Advertisment