16 வயது மாணவனை, 40 வயது ஆசிரியை ஒருவர் ஒரு வருடத்திற்கும் மேலாக பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில், ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை மாணவரின் குடும்பத்தினர் கவனித்துள்ளனர். இதையடுத்து, தான் ஆசிரியை ஒருவரால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மாணவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் 40 வயது ஆசிரியையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 2023இல் பள்ளி ஆண்டு விழா நடந்த போது பாதிக்கப்பட்ட மாணவனை, ஆசிரியை சந்தித்துள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகு, பாலியல் உறவு குறித்து தனது உணர்வுகளை மாணவனிடம் அந்த ஆசிரியை வெளிப்படுத்தியுள்ளார். இதை கேட்டு தயங்கிய மாணவன், ஆசிரியரைத் தவிர்க்க தொடங்கினார். ஆனால், உறவை ஏற்றுக்கொள்ளும்படி, மாணவனின் பெண் தோழியிடம் ஆசிரியர் உதவி கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட அந்த தோழி, இந்த காலத்தில் வயதான பெண்களுக்கும் டீனேஜ் பையன்களுக்கு இடையிலான உறவு என்பது சாதாரணமான விஷயம் என்று கூறி மாணவனை சம்மதிக்க முயற்சித்துள்ளார்.
பெண் தோழியின் பல வலியுறுத்தலுக்குப் பிறகு, மாணவன் ஆசிரியரைச் சந்திக்க முடிவு செய்துள்ளார். மாணவனை தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. விலை உயர்ந்த ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், அந்த மாணவனுக்கு அதிகளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், மாணவருக்கு பதற்ற எதிர்ப்பு மாத்திரைகளை கொடுத்து ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன், தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். சிறுவன் பள்ளியில் இருந்து வெளியேறிவிட்டா ஆசிரியர் அவனை தனியாக விட்டுவிடுவார் என்று எண்ணி குடும்பத்தினர் எந்தவித புகார் அளிக்காமல் அமைதியாக இருந்துள்ளனர்.
ஆனால் சமீபத்தில் அந்த ஆசிரியர், வீட்டு ஊழியர்கள் மூலம் மாணவரை மீண்டும் தொடர்பு கொண்டு சந்திக்கும்படி கேட்டுள்ளார். இதில் பொறுமை இழந்த மாணவரின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர் என்பது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை கைது செய்த போலீசார், மாணவரின் பெண் தோழி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.