பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் திடீர் தற்கொலை; அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்!

swetch

incident happened to Famous female newsreader swetcha votakar in hyderabad

பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் நள்ளிரவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் சிக்கட்பள்ளியில் உள்ள ஜவஹர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வெட்சா ஒட்டகர் (40). பிரபல தெலுங்கு செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவர், பிரபல எழுத்தாளராகவும் இருந்துள்ளார். தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு மக்கள் போராடிய போது, அவர்களுக்கு ஆதரவாக களத்தில் நின்று தீவிரமாகப் போராடியதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு தெலுங்கு தொலைக்காட்சிகளில் செய்தி தொகுப்பாளராகப் பணியாற்றிய ஸ்வெட்சா, தெலுங்கானா இயக்கத்திலும் மிகவும் தீவிரமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கே.சந்திரசேகர் ராவின் குடும்பத்தினரால் விளம்பரப்படுத்தப்படும் டி-நியூஸ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். தனது கணவர் கிராந்தி கிரணிடம் இருந்து கடந்த 2014இல் விவாகரத்து பெற்ற இவர், தனது பெற்றோர்களுடன் சில ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். கடந்த 4 வருடமாக ஸ்வெட்சா, தனது 13 வயது மகளுடன் ஜவஹர் நகரில் தனியாக வாழ்ந்து வந்தார். அதே வீட்டில் அவர், பூர்ணசந்தர் என்ற நபருடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி இரவு திடீரென நள்ளிரவு நேரத்தில் ஸ்வெட்சா தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஸ்வெட்சா ஒட்டகரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபல செய்தி வாசிப்பாளர் ஸ்வெட்சா ஒட்டகர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இவருடைய திடீர் மரணம், ஊடகத்துறையினர் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

hyderabad journalist telangana
இதையும் படியுங்கள்
Subscribe