அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19 உட்பிரிவு 7 மற்றும் 25 உட்பிரிவு 2இன்படி, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (10.12.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தின் தொடக்கத்தின் போது, விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்.
அதே சமயம் அக்கட்சியின் அவைத் தலைவரும், இன்றைய கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டிய தமிழ்மகேன் உசேனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக செயற்குழுவின் தற்காலிக அவைத் தலைவராக, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி நியமிக்கப்பட்டு செயற்குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரம் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இத்தகைய சூழலில் தான் அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே காத்திருந்தனர்.அதன்படி அங்கிருந்தவர்கள் உள்ளே செல்வதற்காக 3 பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு பாதையும், செயற்குழு உறுப்பினருக்கு ஒரு பாதையும், சிறப்பு அழைப்பாளர்களுக்கு என ஒரு பாதையும் என 3 பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் நேரத்தில் மண்டபத்திற்குள் செல்வதற்காக முயன்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/10/admk-meeting-general-body-thallu-mullu-1-2025-12-10-12-15-41.jpg)
அப்போது அந்த மண்டபத்தின் நுழைவாயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தடுப்புகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தவர்கள் கீழே விழுந்தனர். அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்தவர்கள், கீழே விழுந்தவர்களை மிதித்துச் சென்றனர். அப்போது இதனைக் கண்ட பவுன்சர்கள், மெய்க்காப்பாளர்கள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்ததால் கீழே விழுந்தவர்கள் சிலருக்குச் சிறிய அளவில் லேசான காயங்கள் ஏற்பட்டன. இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/10/admk-meeting-general-body-thallu-mullu-2025-12-10-12-14-57.jpg)