திருவாரூரில் நான்கு வருடங்களுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட கொலைக்கு பழிக்கு பழியாக திட்டமிட்டு ஒரு கும்பல் படுகொலை செய்த நிலையில் ஆளை மாற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். விசிகவின் கிளைச் செயலாளராக இருந்த கவியரசன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பாஜகவின் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பெரிய காளிதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

அதே அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். கொத்தனார் பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் பேருந்து நிறுத்தத்தில் பெரிய காளிதாஸுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது திடீரென வந்த ஆறு பேர் நந்தகுமாரை படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மின்வெட்டு ஏற்பட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிய பெரிய காளிதாஸுக்கு பதிலாக நந்தகுமாரை அக்கும்பல் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

a5291
கொலை வழக்கில் சரணடைந்த இளையராஜா Photograph: (thiruvarur)

Advertisment

இந்த கொலை வழக்கில் இளையராஜா, துரைராஜ், ஹரிஹரன், மணி தேவா, தோனி, சிற்றரசன் ஆகிய 6 பேர் இன்று அதிகாலை திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதில் இளையராஜா என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.