Incident BJP Isekudiwe Sivaganga - Police Investigating Photograph: (police)
சிவகங்கையில் பாஜக நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கையை சேர்ந்தவர் சதீஷ். இவர் பாஜக நகர் வர்த்தக பிரிவு தலைவராக பதவி வகித்து வந்தார். சிவகங்கை காவலர் குடியிருப்புபகுதிக்கு எதிரே நகராட்சி கட்டிடத்தில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை ஒன்றை சதீஷ் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வந்த மர்ம கும்பல் ஒன்றால் சதீஷ் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த கொலை தொடர்பாக ஐந்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.