திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாவித். இவர் அதே பகுதியில் சாலையோரம் பெட்டிக்கடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி ஜாவித் மற்றும் அவரது மனைவி மகள் மருமகன் உட்பட ஐந்து பேர் வீட்டை பூட்டி விட்டு ஹைதராபாத்தில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர்.
அதன்படி இந்நிகழ்ச்சி முடித்துவிட்டு மீண்டும் இன்று (10.01.2026) வீடு திரும்பிய போது பூட்டப்பட்டிருந்த வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் மேற்கூரை ஓட்டை உடைத்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 லட்சம் 5 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் 50 ஆயிரம் பணம் உள்ளிட்ட சுமார் 7 லட்சம் மதிப்பிலான நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் எனத் தெரியவந்தது.
இதனையடுத்து இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி நகர போலீசார் தடயங்கள் சேகரிக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் மற்றும வணிகர்கள் அச்சத்துக்குள்ளாகி உள்ளனர்.
Follow Us